மக்களை அச்சுறுத்தும் புதிய நோய்!! மீண்டும் பகீர்!!1941186395
மக்களை அச்சுறுத்தும் புதிய நோய்!! மீண்டும் பகீர்!!
தக்காளி காய்ச்சலை தொடர்ந்து கேரளாவில் இருவருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நோரோ வைரஸ் உலக அளவில் பரவி வரும் வயிறு தொடர்புடைய தொற்று. வாந்தி, பேதி உள்ளிட்டவை இதன் அறிகுறிகள். குடல் எரிச்சல், சத்துணவுக் குறைபாடு போன்றவையும் இந்தத் தொற்றால் ஏற்படுகின்றன.
உலக அளவில் ஆண்டுதோறும் 68.5 கோடி பேர் நோரோ வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 20 கோடி பேர் குழந்தைகள். கேரளாவில் முதன்முதலாக நோரோவைரஸ் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கண்டறியப்பட்டது.
அப்போது ஆலப்புழா நகராட்சியிலும் அதன் அருகில் உள்ள ஊராட்சிகளிலும் 950 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டது. இத்தொற்றின் பாதிப்பு சுமார் ஒன்றரை மாதத்துக்கு நீடித்தது.
தற்போது இத்தொற்று வேகமாகப் பரவி வரும் போதிலும் இந்த நோய் தானாகவே கட்டுக்குள் வரக்கூடியது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இத்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 92 சதவீதம் பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர்.
ஆலப்புழாவில் இத்தொற்று பரவியதற்குக் காரணம் மாசடைந்த குடிநீர் என்பது கண்டறியப்பட்டது. இந்த ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்ஞம் பகுதியில் பள்ளி செல்லும் குழந்தைகளில் இருவருக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளது.
Comments
Post a Comment