வாங்காத பொருளுக்கு மாதத் தவணை EMI-யில் செல்போன் வாங்கியவருக்கு நேர்ந்த பரிதாபம்!
வாங்காத பொருளுக்கு மாதத் தவணை EMI-யில் செல்போன் வாங்கியவருக்கு நேர்ந்த பரிதாபம்! திருச்சி பொன்னகர் காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் ஏற்கெனவே வீட்டு உபயோகப் பொருட்களை (பஜாஜ்) தனியார் நிதி நிறுவனம் மூலம் மாத தவணையில் வாங்கி அதற்கான முழுத் தொகையையும் கட்டி முடித்துள்ளார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் மீண்டும் ஒரு புதிய கைபேசியை பஜாஜ் நிதி நிறுவனம் மூலம் விக்னேஸ்வரன் மாத தவணையில் வாங்கியுள்ளார். முதல் மாத தவணையில் அவருக்கு குறிப்பிட்ட 3600 ரூபாயைவிட கூடுதலாக 5000 ரூபாய் அவரது வங்கிக் கணக்கில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து விக்னேஸ்வரன் தனியார் நிதி நிறுவனத்திடம் முறையிட்டபோது சரிவர பதிலளிக்காததால் அந்நிறுவனத்திடம் மீண்டும் இவர் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்துள்ளார். இரண்டாவது மாதத்திலும் அதேபோல் தவணை ரூபாயுடன் 5000 ரூபாய் கூடுதலாக வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதையறிந்து நேரடியாகச் சென்ற அவர், தான் வாங்கிய பொருளுக்கு தவணைத் தொகை 3206 ரூபாய் தான்; ஆனால் 5 ஆயிரம் ரூபாய் கூடுதலாக எடுப்பதாக புகார் தெரிவித்திருக்கிறார். அதற்கு பஜாஜ்(வீனஸ் எலக்ட்ரானிக்ஸ் விநியோகஸ்த...