Posts

Showing posts with the label #Celebration | #Theater | #Glasses | #Shattered

Beast கொண்டாட்டம்.. தியேட்டர் கண்ணாடிகளை உடைத்து ரசிகர்கள் அட்டகாசம்

Beast கொண்டாட்டம்.. தியேட்டர் கண்ணாடிகளை உடைத்து ரசிகர்கள் அட்டகாசம் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் அதிகாலை பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை காண சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில்  ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அதிகாலையிலேயே குவிந்தனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் திரைப்படத்தை பார்க்க குவிந்ததோடு அங்கு ஒலித்த பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டனர். அதிகாலை காட்சிக்கு திரையரங்கிற்கு முன்பு குவிந்த பல பேரிடம் படத்தை பார்க்க உரிய டிக்கெட் இல்லை என்றாலும் காட்சிக்கான அழைப்பு விடுக்கப்பட்ட உடன் திரையரங்கில் கூட்டம் அத்துமீறி நுழைந்ததால் திரையரங்க பணியாளர்கள் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். உரிய டிக்கெட் இல்லை என்றாலும் திரையரங்கில் அத்துமீறி நுழைந்த ரசிகர்கள் தானாகவே இருக்கைகளில் சென்று அமர என்ன செய்வது என்று தெரியாமல் திரையரங்க உரிமையாளர்கள் விழி பிதுங்கி நிற்க துவங்கினர். ஒருகட்டத்தில் உரிய டிக்கெட் உடன் வந்த ரசிகர்கள் திரையரங்கிற்கு இடமில்லாமல் தவிக்க பலரும் திரைப்படத்தை திரையரங்கிற்குள் நின்றுகொண்டு பார்க்கும் நில...