பீஸ்ட்\' பார்க்க விடுமுறை தருகிறோம்: ஊழியர்களை குஷிபடுத்திய நிறுவனங்கள்
பீஸ்ட்\' பார்க்க விடுமுறை தருகிறோம்: ஊழியர்களை குஷிபடுத்திய நிறுவனங்கள் நடிகர் விஜய் நடித்துள்ள `பீஸ்ட்' படம் நாளை வெளியாக உள்ள நிலையில், பல நிறுவனங்கள் விடுமுறை அளித்து ஊழியர்களை குஷிபடுத்தியுள்ளது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `பீஸ்ட்'. விஜய் நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள அரபிக்குத்து பாடல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அண்மையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி தெறிக்கவிட்டது. இதில் ஒரு காட்சி, காவி துணியை விஜய் கிழிப்பதுபோல் இருந்தது. இந்த காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே, அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார் நடிகர் விஜய். பரபரப்பு, சர்ச்சைக்கு மத்தியில் `பீஸ்ட்' படம் நாளை வெளியாகிறது. படத்தை பார்க்க பல ஊழியர்கள் விடுமுறை கேட்டு வருகின்றனர். இந்நிலையில், பீஸ்ட் படத்தை தங்கள் ஊழியர்கள் பார்த்துக் கொள்ளும் வசதியாக பல்வேறு நிறுவனங்கள் விடுமுறை அளித்துள்ளன. திர...