கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசிலின் மிரட்டலான நடிப்பில் விக்ரம் ட்ரெய்லர் வெளியீடு…


கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசிலின் மிரட்டலான நடிப்பில் விக்ரம் ட்ரெய்லர் வெளியீடு…


கமல், விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசிலின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எதிர்பார்ப்பை மிஞ்சும் அளவுக்கு ட்ரெய்லர் உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் உள்ளது. மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக மெகா ஹிட் படங்களைக் கொடுத்தவரும், கமலின் தீவிர ரசிகருமான லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

அனிருத்தின் இசையில் படத்திலிருந்து வெளியான பத்தல பத்தல பாடல், ரசிர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீடு ஆகியவை சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இதையும் படிங்க - அட்லீ சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த முன்னணி நடிகர்... என்ன சொன்னார் தெரியுமா?

இரவு 8 மணியளவில் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த விக்ரம் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

ட்ரெய்லரைப் பார்க்க...

படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் கமல், விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். குறிப்பாக கமலின் நடிப்பு மற்றவர்களை மிஞ்சும் விதத்தில் உள்ளது.

இதையும் படிங்க - கோப்ரா படத்தில் 20 விதமான கெட்அப்பில் வரும் நடிகர் விக்ரம்…. ஆகஸ்டில் ரிலீஸ் செய்ய திட்டம்

நீண்ட நாட்களுக்கு பின்னர் மாஸ்ஸான கமலை பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் உள்ளனர். ட்ரெய்லர் வெளியான சிறிது நேரத்திலேயே அதிக விருப்பங்களையும் பகிர்வுகளையும் கொண்டதாக விக்ரம் ட்ரெய்லர் வரவேற்பை பெற்றிருக்கிறது.

 

Comments

Popular posts from this blog

Home

How to grow and care for a spider plant #Spider