அபாய கட்டத்தில் இருக்கும் டிஆர்.. சிம்புவின் பத்து தல படத்திற்கு வந்த பேராபத்து


அபாய கட்டத்தில் இருக்கும் டிஆர்.. சிம்புவின் பத்து தல படத்திற்கு வந்த பேராபத்து


சிம்புவின் தந்தை, சிம்புவின் குரு, சிம்புக்கு எல்லாவுமாய் இருப்பவர் அவரது தந்தை. சிறு வயதிலிருந்து சினிமாவில் சிம்புவை உருவாக்கிவிட்டனர் அவரது தந்தையான நடிகரும், பாடலாசிரியர், கலை இயக்குனர், பின்னணி பாடகர் என பன்முகத் திறமை உடையவர் டி ராஜேந்திரன்.

இப்போது டி ராஜேந்தர் உடல் நலிவுற்று அபாய கட்டத்தில் இருந்து வருகிறார். சென்னையில் உள்ள ஒரு பிரபலமான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வளவுக்கும் டி ராஜேந்தரருக்கு ஒரு கெட்ட பழக்கம் கிடையாது.

அவரது வெளியில் என்ன பிரச்சினை என்பதை சொல்ல மறுக்கிறார்கள். ஒரு வார காலமாக மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை சரிவர பலன் அளிக்காததால் இங்குள்ள டாக்டர்கள் கைவிட்டனர்.

இதனால் அவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என குடும்பத்தினர்கள் மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதற்காகவே தனி விமானம் ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவர் தன்னுடைய மகனை மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிற்கு அமலா, நளினி, ஜீவிதா, ஜோதி, மும்தாஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளை வளர்த்துவிட்ட பெருமைக்குரியவர்.

தற்போது சிம்பு நடிப்பில் ஓபுலி N கிருஷ்ணா இயக்கும் ‘பத்து தல’ சூட்டிங் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் தந்தை தான் முக்கியம் என்று சிம்பு தந்தைக்காக மருத்துவமனை சென்றுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Related Topics:, , , , , , , , , , ,

Comments

Popular posts from this blog

Cricut Joy Bridemaids Gift Basket from Dollar Store

Facebook blocking my article showed the urgent need for huge tech giants to be held accountable #Article