கமலுடன் விரைவில்… விக்ரம் ஆடியோ லான்ச்சில் பா.ரஞ்சித் வெளியிட்ட சூப்பர் அப்டேட்…
கமலுடன் விரைவில்… விக்ரம் ஆடியோ லான்ச்சில் பா.ரஞ்சித் வெளியிட்ட சூப்பர் அப்டேட்…
இந்தாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் உள்ளது. மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக மெகா ஹிட் படங்களைக் கொடுத்தவரும், கமலின் தீவிர ரசிகருமான லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
அனிருத்தின் இசையில் படத்திலிருந்து வெளியான பத்தல பத்தல பாடல், ரசிர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீடு ஆகியவை சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில் விக்ரம் படத்தின் நட்சத்திரங்களை தவிர்த்து இயக்குனர் பா.ரஞ்சித், சிம்பு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய பா.ரஞ்சித் விரைவில் கமலுடன் பணியாற்றப் போவதாகவும், இந்தப் படம் மதுரையை மையமாகக் கொண்டு, விருமாண்டி ஸ்டைலில் உருவாக்கப்படும் என்றும் கூறினார்.
ரஞ்சித் அளித்துள்ள இந்த தகவல் கமல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கபாலி, காலா படங்களின் மூலம் ரஜினிகாந்துக்கு புதிய ட்ரெண்டை பா.ரஞ்சித் ஏற்படுத்தினார்.
கமல் ஹாசனின் விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி, விஜய், சூர்யா?
சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை மிகப்பெரும் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் கமலுடன் பணியாற்றப் போவாதாக ரஞ்சித் அறிவித்துள்ளார். இந்த காம்போவில் வெளிவரும் படம் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment