தங்கம் விலை திடீர் சரிவு: ஒரே நாளில் சுமார் 500 ரூபாய் குறைந்ததால் இன்ப அதிர்ச்சி


தங்கம் விலை திடீர் சரிவு: ஒரே நாளில் சுமார் 500 ரூபாய் குறைந்ததால் இன்ப அதிர்ச்சி


தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 59ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 472ம் குறைந்துள்ளது நகை பிரியர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம்

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4846.00என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 59 ரூபாய் குறைந்து ரூபாய் 4787.00என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 38768.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 472 குறைந்து ரூபாய் 38296.00என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5186.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41488.00எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 59ம், ஒரு சவரன் ரூபாய் 472ம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ. 66.10 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 230 காசுகள் குறைந்து ரூபாய் 64.80 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 64800.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Spread the love

Comments

Popular posts from this blog