கோப்ரா படத்தில் 20 விதமான கெட்அப்பில் வரும் நடிகர் விக்ரம்…. ஆகஸ்டில் ரிலீஸ் செய்ய திட்டம்


கோப்ரா படத்தில் 20 விதமான கெட்அப்பில் வரும் நடிகர் விக்ரம்…. ஆகஸ்டில் ரிலீஸ் செய்ய திட்டம்


கோப்ரா படத்தில் 20 விதமான தோற்றத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார் என்றும், ஆகஸ்டில் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் கோப்ரா படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எஃப். 2 படத்தில் நடித்த ஸ்ரீனிதி ஷெட்டி நடித்துள்ளார்.

2 ஆண்டுகளுக்கு முன்னரே கோப்ரா படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கமல் ஹாசனின் விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி, விஜய், சூர்யா? 

நீண்ட நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்தியதில் அதிக செலவை தயாரிப்பாளருக்கு ஏற்படுத்தியதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து மீது விமர்சனங்கள் எழுந்தன.

இதையும் படிங்க - 5 பாடல்களைக் கொண்ட ‘விக்ரம்’ படத்தின் ஆல்பம்… ட்ராக் லிஸ்ட்டை வெளியிட்டார் அனிருத்

இந்த நிலையில் கோப்ரா படத்தை ஆகஸ்ட் மாதம் 11-ம்தேதி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்தப் படத்தில் 20 தோற்றத்தில் நடிகர் விக்ரம் நடித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக விக்ரமுக்கு சொல்லுக்கும் படியாக படங்கள் ஏதும் அமையவில்லை. சுமாரான வரவேற்பை பெற்ற மகான் திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்பட்டது.

இதையும் படிங்க - இந்தியாவில் மட்டும் ரூ. 1,000 கோடி வசூலை குவித்த கே.ஜி.எஃப். 2… பல மாநிலங்களில் தொடர்கிறது கலெக்சன்…

இதனால் கோப்ரா மீதான எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. தற்போது விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் இடம்பெற்றிருந்தார். சில காரணங்களுக்காக இந்த படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிக் கொண்டே போகிறது.

Comments

Popular posts from this blog