13 மாவட்டங்களில் இன்னும் சிறிது நேரத்தில் மழை: வானிலை ஆய்வு மையம்
13 மாவட்டங்களில் இன்னும் சிறிது நேரத்தில் மழை: வானிலை ஆய்வு மையம்
சென்னை உட்பட 13 மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டிருக்கிறது
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரக்கூடிய அசானி புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது புயலானது படிப்படியாக ஆந்திர மாநிலகடற்கரையை நோக்கி நகர்ந்து அதன்பிறகு படிப்படியாக வலுவிழக்கக்கூடிய சூழல் உள்ளது.
இதனால் 13 மாவட்டங்களில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கிறதுSpread the love
Comments
Post a Comment