வேண்டும் ஆன்லைன் தேர்வு - வைரலாகும் சிஎஸ்கே ரசிகர் கோரிக்கை
ஐபிஎல் போட்டிகளில் சிக்ஸ்சர், விகெட்டுக்கள் போன்ற ஆட்டத்தின் சுவாரஸ்சிய நிகழ்வுகளை தாண்டி, ரசிகர்கள் மைதானத்தில் செய்யும் சம்பவங்களும் ஹெட்லைன் செய்திகளாக மாறுவது உண்டு.
அப்படித்தான் மும்பை டிவை பாட்டில் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மும்பை இந்தியனஸ் இடையேயான போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த நிலையில், அந்த போட்டியில் ரசிகர் ஒருவரின் பதாகையும் காண்போரின் கவனத்தை ஈர்த்தது.
போட்டியை மைதானத்தில் காணவந்த சிஎஸ்கே உடை அணிந்திருந்த ரசிகர் ஒருவர், தனது கையில் "#We want Online exam" அதாவது எங்களுக்கு ஆன்லைன் தேர்வுதான் வேண்டும் என கோரிக்கையை எழுப்பியுள்ளார். விநோதமான கோரிக்கை கொண்ட இந்த பதாகையை ஏந்தியுள்ள இந்த ரசிகரின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment