சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் முதல் முறையாக ஜம்மு - காஷ்மீர் செல்கிறார் பிரதமர் மோடி
ஆண்டுதோறும் ஏப்ரல் 24 ஆம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படும் நிலையில், தேசிய பஞ்சாயத்து ராஜ் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக ஜம்மு காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி காலை 11:30 மணிக்கு நாட்டில் உள்ள அனைத்து கிராம சபைகளுடன் அவர் உரையாற்றுகிறார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய 370-வது பிரிவை 2019-ல் மத்திய அரசு ரத்து செய்த பிறகு, பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீருக்கு செல்வது இதுவே முதல் முறை.
ஜம்மு பயணத்தின் போது, ரூ.3,500 கோடி செலவில், வாணி கால் குவாசி கண்ட் சாலையில் கட்டப்பட்டுள்ள சுரங்க பாதையை பிரதமர் திறந்து வைக்கவுள்ளார். இந்த சுரங்கப்பாதை ஜம்முவிற்கும் காஷ்மீருக்கும் இடையேயான இடையே அனைத்து பருவ நிலையிலும் தொடர்பை ஏற்படுத்த உதவும்.
Comments
Post a Comment