தளபதி 66ல் மிஸ் ஆகும் மாஸ்?... கவலையில் ரசிகர்கள்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் சில நாள்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய்யை வீணாக்கிவிட்டார் நெல்சன் என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இந்தச் சூழலில் விஜய் வம்சி இயக்கத்தில் அடுத்த படத்தில் நடித்துவருகிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துவருகிறார்.
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கியது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
Comments
Post a Comment