தனுஷிற்கு தேங்க்ஸ் சொன்ன ஐஸ்வர்யா... எதுக்குன்னு தெரியுமா?


தனுஷிற்கு தேங்க்ஸ் சொன்ன ஐஸ்வர்யா... எதுக்குன்னு தெரியுமா?


இயக்குனரும் சூப்பர் ஸ்டாரின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய முன்னாள் கணவர் தனுஷின் நடிப்பில் 3 என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற நிலையில் படத்தின் பாடல்களும் சிறப்பாக அமைந்திருந்தன. படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் அனைவராலும் வெகுவாக விரும்பப்பட்டது.

சமீபத்தில் தனுஷ் உடனான தனது விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டிருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த முடிவு திரைத்துறையில் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தனுஷும் ஐஸ்வர்யாவும் தங்களது கேரியரை நோக்கிய பயணங்களை உற்சாகத்துடன் தொடர்ந்து வருகின்றனர்.

தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி என தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்திய நிலையில் ஐஸ்வர்யாவும் முசாஃபர் என்ற இசை ஆல்பத்தை இயக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தமிழில் இந்த ஆல்பத்திற்கு பயணி என்று பெயரிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இந்த வீடியோவை தமிழில் ரஜினி வெளியிட்டார். மற்ற மொழிகளிலும் முக்கியமான நடிகர்களை கொண்டு இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார் ஐஸ்வர்யா. காதலர் தினத்தையொட்டி அழகிய காதலை இந்த வீடியோ கதைக்களமாக கொண்டிருந்தது. எளிமையான காதலாக இருந்தாலும் சிறப்பான வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

காதல் மற்றும் அன்பை அடிப்படையாகக் கொண்டு இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோவிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர். அதேபோல நடிகர் தனுஷும் இந்த வீடியோவிற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து இருந்தார்.

ஐஸ்வர்யா நன்றி

தொடர்ந்து தனுஷின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்த ஐஸ்வர்யா மிகவும் வேகமான பாராட்டு என்று தெரிவித்துள்ளார். இருவரும் விவாகரத்து முடிவை வெளியிட்டிருந்தாலும் ஒருவருக்கொருவர் அவர்களது படைப்புகளுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்ளும் பண்பு இருவரிடமும் காணப்படுவது ரசிகர்களின் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளது.

சிலர் இந்த பண்புடன் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு இருவரும் விரைவில் இணையும் முடிவை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். சிலர் தனுசை கலாய்த்தும் போஸ்ட் செய்துள்ளனர். என்னாது ப்ரெண்டா என்று கேட்டு உடைந்த இதயத்துடன் அவர்கள் தங்களது கமெண்ட்டை செய்துள்ளனர்.

Comments

Popular posts from this blog