காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை


காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை


கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ள சோழபுரம் சின்ன அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் மாலியா(எ) சோனாலி(23). இவர், கும்பகோணம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த இன்ஜினீயரிங் பட்டதாரியான சக்திதாஸ் என்பவரை கடந்த 2 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சக்திதாஸ், சோழபுரத்தில் குடிதண்ணீர் வினியோகம் செய்து வருகிறார்.

இருவருக்கும் ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மாலியா தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு மனமுடைந்த நிலையில் இருந்த மாலியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த சோழபுரம் போலீசார் மாலியாவின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:

காதல் திருமணம் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

Comments

Popular posts from this blog