Alya Manasa : மீண்டும் அம்மாவான ஆல்யா மானசா.. மகிழ்ச்சியுடன் பதிவிட்ட சஞ்சீவ்
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடியாக நடித்தனர். இவர்களின் ஜோடி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.குறிப்பாக ஆல்யா மானசாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். அதையடுத்து ஆல்யா மானசா, சஞ்சீவ் இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இருவருக்கும் ஐலா என்ற பெண் குழந்தையும் உள்ளது.
குழந்தை பிறந்த பின்பு உடல் எடையை குறைத்து ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக ஆல்யா மானசா எண்ட்ரி கொடுத்தார். சீரியல் டாப்பில் சென்று கொண்டிருக்கும் போது ஆல்யா மானசா மீண்டும் கர்ப்பமானார். 9 மாதம் வரை ஷூட்டிங்கில் கலந்துக்கொண்ட ஆல்யா சீரியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார். எனவே ஆல்யா மானசாவிற்கு பதிலாக ரியா என்பவரை அறிமுகப்படுத்தினர்.
Comments
Post a Comment